91 லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.பி.தலைமையில் 700 போலீசார் நடத்திய ஸ்ட்ராமிங் ஆபரேஷனை நடத்தினர். இதில் 91 லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் கூட்டாய்வு (ஸ்ட்ராமிங் ஆபரேஷன்) மூலம் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனையில் ஈடுபடுகின்றனர்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் தலைமையில், மாவட்டம் முழுவதும் 700 போலீசார் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 18 எதிரிகள் மீது நிலுவையில் இருந்த பிணைகள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 12 நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கெட்ட நடத்தைக்காரர்கள் 190 நபர்களை தணிக்கை செய்து அவர்களில் 24 பேர் மீது நன்னடத்தை சான்று பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாவட்டம் முழுவதும் 83 இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தியதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக 95 வழக்குகளும், இளஞ்சிரார்கள் வாகனம் ஒட்டிய குற்றத்திற்காக அவ்வாகன உரிமையாளர்களின் மீது 2 வழக்குகளும் பதியப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின்படி மொத்தம் 856 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 41 கீழ் 59 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள 91 தங்கும் விடுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது.
No comments