பொன்விழாவை கேக் வெட்டி கொண்டாடிய பெண் போலீசார்
தமிழ்நாடு போலீசில் பெண் போலீசார் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை யொட்டி திருவண்ணாமலையில் டிஐஜி, எஸ்பி முன்னிலையில் பெண் போலீசார், கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
தமிழ்நாடு காவல்துறையில் 1973ம் ஆண்டிலிருந்து பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். இது 50 வது ஆண்டை தொட்டுள்ள நிலையில் இன்று பொன்விழா ஆண்டை பெண் போலீசார் கொண்டாடினர்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெண் போலீசாருக்கு, போலீஸ் நிலையங்களில் தனி ஓய்வு அறை, பெண் போலீசாரின் குழந்தைகளின் காப்பங்கள் மேம்படுத்துதல், குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல், ரோல் கால் காலை 7 மணியிலிருந்து 8 மணிக்கு மாற்றம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
திருவண்ணாமலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலர் எஸ். ரேஷ்மா கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினார்.
இதில் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஷ்வினி மற்றும் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் கலந்து கொண்டனர்.
No comments