சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

திருவண்ணாமலை புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்ற திருவண்ணாமலை சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களை மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். 

மத்திய மக்கள் தொடர்பகம் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட டிஜிட்டல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 3 நாட்கள் நடைபெற்றன. 

திருவண்ணாமலை பெரியதெருவில் உள்ள லட்சுமி அரங்கநாதன் திருமண மஹாலில் நடைபெற்ற இந்த கண்காட்சியை தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். 

சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

இந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை தலைமை தாங்கினார். பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். களவிளம்பர அலுவலர் சு.முரளி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், வேளாண் இணை இயக்குநர் செ.அரக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அ.சிலம்பரசன் , அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) நா.முரளி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பா.கந்தன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் க.பு.கணேசன், வரலாற்று துறை தலைவர் ரா.ஸ்தனிஸ்லால், பேராசிரியர் ரஹமத்ஷா, வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன் உள்பட மத்திய மாநில அரசு அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

முடிவில் களவிளம்பர உதவி அலுவலர் மு.ஜெயகணேஷ் நன்றி கூறினார்.

சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

கண்காட்சியில் மகாத்மா காந்தி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகு முத்துகோன், தீரன் சின்னமலை, சுப்பிரமணிய பாரதியார். காமராஜர், இரணியன் உள்ளிட்ட பல சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களோடு அவர்களின் வாழ்க்கை குறிப்பு மற்றும் செய்த தியாகங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. 

கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் திருவண்ணாமலை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் பழங்கால படங்களை பார்த்து வியந்தனர். அவர்களை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தற்காக அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.