எஸ்.சி.,எஸ்.டியினருக்கு எம்.பி.ஏ நுழைவு தேர்வுக்கு பயிற்சி

எஸ்.சி.,எஸ்.டியினருக்கு எம்.பி.ஏ நுழைவு தேர்வுக்கு பயிற்சி

எஸ்.சி.,எஸ்.டி மாணாக்கர்கள் இலவச எம்.பி.ஏ நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்திய மேலாண்மைக் கழகம் (IIM-Indian Institute of Management) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT-Indian Institute of Technology) போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை (MBA)  மேற்படிப்பு பயில நிகழ் ஆண்டு நவம்பர் 2023ல் நடைபெறவுள்ள Common Admission Test (CAT) பொது நுழைவுத் தேர்விற்கான பயிற்சி வழங்கப்படும்.   

இப்பயிற்சியினை பெற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு  முடித்த (B.E, B.Tech, B.Sc, BBA, etc) அல்லது கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.  மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, மற்றும்  தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாகவே நடைபெறும்.  

எஸ்.சி.,எஸ்.டியினருக்கு எம்.பி.ஏ நுழைவு தேர்வுக்கு பயிற்சி

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் தரம் வாய்ந்த பயிற்சி  நிறுவனத்தின் மூலம் பயிற்சியில் சேர்வதற்கான நுழைவு தேர்வு (Screeening Test / Eligibility Test) நடத்தப்பட்டு சீரிய மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு செய்யப்பட்ட  மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான CAT, XAT, IIFT, SNAP நுழைவுத் தேர்வு பயிற்சிகள்  வழங்கப்படும். பொது நுழைவுத் தேர்விற்கான பயிற்சியினை(CAT) வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான, Interview, Group Discussion, Written Ability Test ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். 

Admission கிடைத்தவுடன் MBA பயில ஆகும் சுமார் ரூ.25 லட்சம் செலவினை தாட்கோ அல்லது வங்கிகள் மூலமாக கல்விக் கடனாக பெற்று தரப்படும். இப்பயிற்சி காலத்தில் மாணாக்கர்களுக்கு தேவையான மடிக்கணிணி வசதிகள் தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்து தரப்படும்.   

எஸ்.சி.,எஸ்.டியினருக்கு எம்.பி.ஏ நுழைவு தேர்வுக்கு பயிற்சி

மேற்கண்ட தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் பயிற்சி பெற www.tahdco.com  என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post

No comments