4ந் தேதி அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திரம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4ந் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் தொடங்குகிறது.
முருகப் பெருமானுக்கு உரிய சிறப்பு விரத தினமாக பங்குனி உத்தரம் கொண்டாடப்படுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.
சுவாமிக்கு நடைபெறும் திருக்கல்யாணங்கள் உற்சவ மூர்த்திக்கு நடத்தப்படும் நிலையில் திருவண்ணாமலை தலத்தில் கோயில் கருவறையில் மூலவருக்கும், கல்யாண மண்டபத்தில் உற்சவருக்கும் திருமணங்கள் நடைபெறும். இப்படி இரு திருமண விழாக்கள் நடைபெறும் ஒரே சிவாலயம் திருவண்ணாமலை ஆகும்.
No comments