22ந் தேதி கிராம சபை கூட்டம்-கலெக்டர் தகவல்

22ந் தேதி கிராம சபை கூட்டம்-கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 22ந் தேதி உலக தண்ணீர் தினத்தை யொட்டி கிராம சபை கூட்டம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது, 

22.03.2023 உலகதண்ணீர் தினம் அன்று காலை 11 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்களும் இக்கிராம சபை கூட்டங்களில் பங்குபெற்று கூட்டத்தில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து விவாதிக்கலாம். 

உலக தண்ணீர் தினத்தின் கருப் பொருள் குறித்தும், கிராம ஊராட்சி நிர்வாக மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கலாம். 

22ந் தேதி கிராம சபை கூட்டம்-கலெக்டர் தகவல்

மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் (VPDP), தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம்,  ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்),  பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம்,  அனைவருக்கும் வீடுகணக்கெடுப்பு, சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மை குறித்த விழிப்புணர்வு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பாரத்நெட் இணைய தள வசதி மற்றும் இதர பொருட்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.  

Next Post Previous Post

No comments