சொத்து பிரச்சனைக்காக தம்பியை அண்ணன் கொலை செய்து பிணத்தை செப்டிங் டேங்கில் வீசிய சம்பவம் கலசப்பாக்கம் அருகே நடந்துள்ளது.
திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் ஏழுமலை(வயது 48). விவசாயி. இவரது தம்பி திருமலை(44). இவர்களிடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. வீட்டு பத்திரத்தை கேட்ட திருமலையை, ஏழுமலை சரமாறியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த திருமலை அதே இடத்தில் இறந்தார். பிறகு தம்பியின் உடலை, வீட்டிற்கு பின்னால் இருந்த கழிவு நீர் தொட்டியில் போட்டு விட்டு மண்ணை கொண்டு மூடியதாகவும், போதையில் இருந்ததால் முழுமையாக மூட ஏழுமலையால் முடியவில்லை என கூறப்படுகிறது.
காலையில் அக்கம்-பக்கத்தினர் வந்து பார்த்த போது செப்டிங் டேங்கில் பிணமாக கிடந்த திருமலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் பிணத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
![]() |
ஏழுமலை |
இது சம்மந்தமாக கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
சொத்துக்காக உடன் பிறந்த தம்பியை குடிவெறியில் அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Social Plugin