ராணுவவீரர் படுகொலை -முன்னாள் ராணுவவீரர்கள் ஆர்ப்பாட்டம்

ராணுவவீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலையில் முன்னாள் ராணுவவீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராணுவ வீரர் பிரபு

ராணுவவீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலையில் முன்னாள் ராணுவவீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 


கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியைச் சேர்நத இந்திய ராணுவ வீரர் பிரபு(வயது 29) திமுகவைச சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். 

பொது குழாயில் துணி துவைத்த தகராறில் இந்த கொலை நடந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சின்னசாமி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திமுகவினரால் ராணுவவீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் நாளை சென்னையில் மெழுகுவர்த்தி ஏற்றி பாஜக சார்பில் பேரணி நடத்தப்படுகிறது.
 
ராணுவவீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலையில் முன்னாள் ராணுவவீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிலையில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே மாவட்ட முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்கம் சார்பில்  இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பி.கருணாநிதி தலைமை தாங்கினார். 

இந்திய தேசம் ஒரு வீரரை இழந்துவிட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி இந்திய ராணுவ வீரர் எல்.என்.கே. பிரபு சில கயவர்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு தீயசக்திகளால்  படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் எல்.என்.கே. பிரபுவை படுகொலை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்க வேண்டும் வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்த்தில் திருவண்ணாமலை, வேட்டவலம், ஜமீன்கூடலூர், கலசபாக்கம், செங்கம், போளூர், ஆரணி,  கண்ணமங்கலம், கேளூர், களம்பூர், சந்தவாசல், தேவிகாபுரம், சேத்துப்பட்டு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராணுவவீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலையில் முன்னாள் ராணுவவீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 
முன்னதாக உயிரிழந்த ராணுவவீரர் பிரபுவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Next Post Previous Post

No comments