சிறுதானிய பாயாசம், லட்டு - கலெக்டர் ஆபீசில் கண்காட்சி

சிறுதானிய பாயாசம், லட்டு - கலெக்டர் ஆபீசில் கண்காட்சி

சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பாயாசம், லட்டு, நவதானிய தோசை உள்ளிட்ட சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 

2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக (IYOM) ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அறிவித்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மக்களிடையே ஆரோக்கியமான மற்றும் மாறுப்பட்ட உணவின் ஒரு பகுதியாக சிறுதானிய உணவுகளை இணைப்பதை ஊக்குவித்து வருகிறது. 

மேலும் சிறுதானிய சாகுபடி குறித்த நுட்பங்கள் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நல துறை மூலம் கற்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறுதானிய உணவில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.


சிறுதானிய பாயாசம், லட்டு - கலெக்டர் ஆபீசில் கண்காட்சி

இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு துறை, வேளாண்மை துறை மற்றும் உழவர் நல துறை, திருவண்ணாமலை மாவட்டம், நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தியது. 


சிறுதானிய பாயாசம், லட்டு - கலெக்டர் ஆபீசில் கண்காட்சி


இதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் சாமை பாயாசம். நவதானிய தோசை, கம்பு லட்டு, கேழ்வரகு தோசை, தினை முறுக்கு என சிறுதானியத்தால் செய்யப்பட்டிருந்த பலவகை  உணவுகள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. 

வேளாண்மை உழவர் நல துறை சார்பாக சிறுதானிய வகை இனிப்புகள் மற்றும் சிறுதானிய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டது, ஒருகிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) சார்பாக 15 வகையான சிறுதானிய வகை உணவு பொருட்களும், 35 வகையான சிறுதானியங்களும் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள், தாங்கள் செய்திருந்த 63 வகையான சிறுதானிய உணவு வகைகளும் கண்காட்சியில் இடம் பெற்றது. 


சிறுதானிய பாயாசம், லட்டு - கலெக்டர் ஆபீசில் கண்காட்சி


இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், பார்வையிட்டு உணவு வகைளை டேஸ்ட் பார்த்தார். மாணவிகள் செய்திருந்த உணவை சாப்பிட்டு பார்த்து அருமையாக செய்திருக்கிறீர்கள் என பாராட்டு தெரிவித்தார். 

ஓட்டல் உரிமையாளர்கள் சார்பாக மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் சிறுதானிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. மேலும் தங்கள் உணவகத்தில் தினமும் ஒருவகை சிறுதானியத்தை சேர்த்துக் கொள்வோம் எனவும் ஓட்டல் உரிமையாளர்கள், அதிகாரிகளிடம்  உறுதி அளித்தனர். 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷ்னி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஷ்மி ராணி, நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை ராமகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குநர் அரக்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சையித் சுலைமான், கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Post Previous Post

No comments