2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்

2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளருக்கு விண்ணப்பிக்க இன்று
கடைசி நாள் என்றும், நுகர்வோர் கோர்ட்டு உதவியாளருக்கு விண்ணப்பிக்க 10ந் தேதி கடைசி நாள் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது, 

வட்டார ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் செய்யார் வட்டாரத்தில் காலியாக உள்ள ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு  ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்கண்ட பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office –ல் குறைந்தது 6 மாத சான்றிதழ் படிப்பு முடித்து (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 31.01.2023ல் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

எல்லை பகுதியில் வசிக்க வேண்டும் 

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பணியிடமுள்ள ஊராட்சி ஒன்றியத்தின் எல்லைப் பகுதிக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களுடன் விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணிபுரிவதற்கு பணி அனுபவ சான்று, கல்வித்தகுதி, சாதிச்சான்று ஆகியவைகளுக்கு ஒளிநகல் (Xerox) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பபடிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

28ந் தேதி கடைசி நாள் 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் திருவண்ணாமலை மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், திருவண்ணாமலை வேங்கிக்கால் &அஞ்சல் 606 604 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 28.02.2023 (இன்று )  மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.


2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இந்த பணிக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

அலுவலக உதவியாளர்

இதே போல் திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது 

கல்வித்தகுதி - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - 18-34 (1-7-2023வரை) 

அடிப்படை ஊதியம் - ரூ.15 ஆயிரத்து 700 

விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி - 10.03.2023 அன்று மாலை 5.00 மணி

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி - தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் (அருகில்), மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை. திருவண்ணாமலை மாவட்டம். 606 604.

நிபந்தனைகள் 

குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

நேர்காணலுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, வயது, முகவரி மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றிற்கான ஆவணங்களின் நகல்கள் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றொப்பமிட வேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் அடித்து இணைக்கக்கூடாது.

நேர்காணல் மூலம் நிரப்பப்படும்

உரிய முறையில் சுய சான்றொப்பமிட்ட தேவையான சான்று ஆவனங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்று ஆவணங்கள் இணைக்க கூடாது.

முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.35 க்கான அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட உறையுடன் பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். 

தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேர்காணல் மூலமாக மேற்கண்ட காலியிடம் நிரப்பப்படும்.

விண்ணப்பத்தரார்களின் அடையாள மற்றும் இருப்பிட சான்றுக்காக கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் புகைப்பட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும். (ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை)

நேர்முக தேர்வு தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறுஞ்செய்தி மூலம் பின்னர் அனுப்பப்படும்.

இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Next Post Previous Post

No comments