தமிழில் மட்டுமே பெயர் வைக்க சட்டம் இயற்ற வேண்டும்

தமிழில் மட்டுமே பெயர் வைக்க சட்டம் இயற்ற வேண்டும்

தமிழில் மட்டுமே பெயர் வைக்க சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசை திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.


திருவண்ணாமலையில் மாவட்ட தமிழ்சங்கம் அலுவலகம் முன்பு தமிழ்ச்சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட தமிழ்சங்க தலைவர் ப.இந்திரராஜன் தலைமை தாங்கினார். டாக்டர் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவர் மா.சின்ராஜ், தொழிலதிபர் எஸ்.டி.தனகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

சங்கத்தின் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ந.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்சங்கத்தின் ஆலோசகர் கவிஞர் முகில்வண்ணன் தமிழ்தாய் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

விழாவில் அவர் பேசியதாவது,

உலகிலுள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப் 21ந் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் மொழி அவசியம் உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு மாநிலத்துக்கு மாநிலம் சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள் பொதுமொழி தாய்மொழி என வகைப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

உலக தாய்மொழி நாள் விழாவை யொட்டி கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை தமிழக முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

வணிக நிறுவனங்களில் பெயர்பலகைகளில் 3ல்  2 பங்கு அளவு தமிழிலும் ஒரு பங்கு பிற மொழிகளிலும் எழுதப்பட வேண்டும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பிற தனியார் துறை ஊழியர்களும் தவறாமல் தமிழில் கையாப்பமிட வேண்டும். தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதி, மத பேதமின்றி தமிழில் மட்டுமே பெயர் வைக்கப்பட சட்டம் இயற்ற வேண்டும்.

வங்கிகளில் தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களில் (ஏடிஎம்) முதலில் தமிழும், இரண்டாவது ஆங்கிலமும் மட்டுமே இருந்தால் போதும். தமிழ்நாட்டில் பிற மொழி தேவையில்லை. திருக்கோயில் வழிபாடு முதல் குடும்ப நிகழ்வு வரை எல்லா நிகழ்வுகளும் தமிழ்க் குடும்பங்களில் தமிழிலேயே நடத்தப்படவேண்டும். ஆரம்பப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். 

இன்று மழலையர் பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே தமிழைக் காக்க பழைய கல்விக்கொள்கையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பட்டது.

விழாவில் சங்கத்தின் துணை தலைவர் பாவலர் ப.குப்பன், அருணை வித்யா கலைகல்லூரி செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ம.கோவிந்தசாமி, பாடகர் மோகன், ஆசிரியர் அ.பலராமன், மின்துறை சேதுமாதவன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், திருக்குறள் காமராஜ், நல்லாசிரியர் பாபு கு.ராதாகிருஷ்ணன், நாராயணன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் அரிமா ஏ.என்.செந்தில்குமார் நன்றி கூறினார்.

தமிழில் மட்டுமே பெயர் வைக்க சட்டம் இயற்ற வேண்டும்


தமிழ் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு 


தேசூர் அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலகத் தாய்மொழி தினத்தை யொட்டி  மாணவ- மாணவிகள் தமிழ் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்தது.
 
இதற்கான ஏற்பாடுகளை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நம்பெருமாள் மற்றும் உதவி ஆசிரியர்கள் சரவணன், பச்சையப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Post Previous Post

No comments