களை கட்டிய தியாகி பள்ளி 52வது ஆண்டு விழா

களை கட்டிய தியாகி பள்ளி 52வது ஆண்டு விழா

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற விதவிதமான கலைநிகழ்ச்சி மற்றும் மாயாஜால நிகழ்ச்சியால்  மாணவர்கள் குதூகலம் அடைந்தனர். 

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 52வது ஆண்டு விழா நடைபெற்றது.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார். முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கி.காளிதாஸ், பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெயக்குமாரி ஆகியோர்  முன்னலை வகித்தார்.

களை கட்டிய தியாகி பள்ளி 52வது ஆண்டு விழா

கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சின்னதிரை நடிகர் டி.சித்து, சின்னத்திரை ஸ்ரேயா அஞ்சன் ஆகியோர் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில்இ தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக  செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நல்ல நிலையில் உள்ளார்கள். இவர்களை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு பயிற்சியும் பல நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும் என்றார். 

விழாவில் தேசிய விருது பெற்ற சார்லி சாப்லின் ஆப் இந்தியா யோனாவின் மாயாஜால நிகழ்ச்சி நடைபெற்றது.

முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மு.சண்முகம் நன்றி கூறினார்.

களை கட்டிய தியாகி பள்ளி 52வது ஆண்டு விழா

இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.வெங்கடேசன்,  இசைஆசிரியர் டி.பாரதி, ஆசிரியர்கள்-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Next Post Previous Post

No comments