பெருமணம் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசம்-பக்தர்கள் நேர்த்திக் கடன்

பெருமணம் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசம்-பக்தர்கள் நேர்த்திக் கடன்

பெருமணம் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா
செக்கிழுத்தும், ராட்டினம் சுற்றியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை அடுத்த பெருணம் சுப்பிரமணியர் கோவிலில் நேற்று நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் செக்கிழுத்தும், ராட்டினம் சுற்றியும் நேர்த்திக் கடனை செலுத்தினர். 

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது, தைப்பூசம் ஆகும். தைப்பூச நாளில் பார்வதி தேவியார், முருகப்பெருமானுக்கு ஞானவேலை வழங்கியதாகவும், அதைக் கொண்டு அவர் அசுர குலத்தை அழித்து தேவர்களை காப்பாற்றியதாகவும் வரலாறு. 

இப்படி சிறப்பு வாய்ந்த தைப்பூச நாளில் காவடி எடுத்தும், முதுகில் அலகு குத்தியும் முருகப்பெருமானின் அருள் கிடைக்க வேண்டி கொள்வார்கள். தமிழகம் முழுவதும் தைப்பூச திருநாள் விழா முருகர் கோவில்களில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 

திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி செக் இழுத்தும், ராட்டினத்தில் தொங்கியும், தேர் இழுத்தும், ஆணிகள் பதிக்கப்பட்ட  காலணியில் ஏறி நின்றும் நேர்த்திக் கடனை செலுத்தினர். 

பெருமணம் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசம்-பக்தர்கள் நேர்த்திக் கடன்

பக்தர்கள் மார்பில் உரல் வைத்து அதில் மஞ்சள், அரிசி இடித்து மாவாக்கி அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்கள். செக்கில் ஆடப்பட்ட எண்ணெய்யை கொண்டு சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த விழாவுக்கு பெருமணம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். முருகபக்தர்கள் குழு தலைவர் அ.தங்கமணி முன்னிலை வகித்தார். விழாவில் ஊர் நாட்டான்மை, த.மூர்த்தி, மு.தனபால் சீனிவாசன் கோவிந்தராஜ் பா.முருகன் அ.சின்னதுரை ராஜா ராஜேந்திரன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், விழா குழுவினர், பொதுமக்கள், பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

எலத்தூர் நட்சத்திர கோவில் 

பெருமணம் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசம்-பக்தர்கள் நேர்த்திக் கடன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில்
 நடைபெற்ற தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வண்ண, வண்ண மாலைகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியரை தரிசனம் செய்தனர். 

மொட்டை அடித்தும், காவடி எடுத்தும், கிரிவலம் வந்தும் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். 

Post a Comment

0 Comments