நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வாய்ப்பு

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக  முடிக்க வாய்ப்பு

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக  முடிக்க வாய்ப்பு


திருவண்ணாமவை மாவட்ட நீதிமன்றங்களில் 
வரும் 11ஆம் தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக  முடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.                


இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான (பொறுப்பு), இருசன் பூங்குழலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது 


தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்துதலின்படி, திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடைபெறள்ளது. 

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக  முடிக்க வாய்ப்பு


நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடக்கிறது. சாலையில் விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, மின்சார பயன்பாடு, வீட்டுவரி, குடிநீர்வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள், கல்விக் கடன், வங்கிக் கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

வழக்காடிகள் நேரடியாக பங்கேற்று சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இழப்பீட்டுத் தொகை, பிற பிரச்சனைகளை இருதரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்கவும் மக்கள் நீதிமன்றங்கள் வழிவகை செய்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Post Previous Post

No comments