கனரா வங்கி சார்பில் வீடு- வாகன கடன் திருவிழா

கனரா வங்கி சார்பில் வீடு- வாகன கடன் திருவிழா

கனரா வங்கி சார்பில் வீடு- வாகன கடன் திருவிழா

மறைமுக கட்டணம் இல்லாததால் பொதுமக்கள் ஆர்வம்

திருவண்ணாமலை கனரா வங்கி சார்பில் வீடு மற்றும் வாகன கடன் திருவிழா நடைபெற்றது. மறைமுக கட்டணம் ஏதும் இல்லை என்ற அறிவிப்பால் கடன் பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். 

திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள கனரா வங்கியில் வீடு மற்றும் வாகனக் கடன் திருவிழா இன்று தொடங்கியது. கனரா வங்கியின் வேலூர் உதவி பொதுமேலாளர் மாதவராவ் விழாவுக்கு தலைமை தாங்கினார். முதன்மை மேலாளர் சி.சிவராமன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் பன்னீர்செல்வம் கடன் வழங்கும் முகாமை துவக்கி வைத்தார்.

 வீட்டு கடனுக்கு 8.90 சதவீத வட்டியும்இ வாகன கடனுக்கு 9.25 சதவீத வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறைமுக கட்டணம் இல்லை, தினசரி குறையும் கடன் நிலுவைத் தொகையிருப்பிற்கேற்ப வட்டி, கடனை முன்னரே செலுத்துவதற்கு அபராத கட்டணம் கிடையாது, பிற நிறுவனங்களில் பெற்ற வீட்டு கடனை கனரா வங்கிக்கு மாற்ற சுலபமான வழிமுறை, இலவச கிரெடிட் கார்டு ஆகியவை கனரா வங்கியில் வீடு மற்றும் வாகன கடன் பெறுபவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனரா வங்கி சார்பில் வீடு- வாகன கடன் திருவிழா

இது மட்டுமன்றி குறுகிய கால சலுகையாக செயலாக்க கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல சலுகை அறிவிப்பால் கடன் திருவிழாவில் ஏராளமான பொதுமக்களும்,  வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டு கடன் பெறுவதற்கான மனுக்களை அளித்தனர். 

விழாவில் கனரா வங்கி கிளை மேலாளர்கள் அருள்(ஏந்தல்), மஞ்சுகிரண்(நொச்சிமலை), கருணாநிதி (வேங்கிக்கால்), சுபாஷ்சந்திரசேகர் (நாடழகானந்தல்), ஓய்வு பெற்ற கனரா வங்கி அதிகாரி ஆர்.நாராயணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த முகாம் நாளையும் (5ந் தேதி) நடக்கிறது. 

மேலும் விவரங்களுக்கு கனரா வங்கி கிளையை அணுகி பயன் பெறலாம் என முதன்மை மேலாளர் சி.சிவராமன் தெரிவித்துள்ளார்.

Next Post Previous Post

No comments