நள்ளிரவில் ஆடுகளை திருடிச் செல்லும் கும்பல்

நள்ளிரவில் ஆடுகளை திருடிச் செல்லும் கும்பல்


கலசப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போனது. இது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 


திருவண்ணாமலை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான கலசபாக்கம் பகுதியில்  பெருமளவில் விவசாயமும், அதற்கு அடுத்த படியாக கால்நடை வளர்ப்பும் உள்ளது. சமீப காலமாக இப்பகுதியில் படித்த இளைஞர்கள் சொந்தமாக ஆட்டுப்பண்ணை அமைத்து ஆடு வளர்க்கும் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கலசபாக்கம் மற்றும் கடலாடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஆட்டுப்பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகள் அடிக்கடி திருடு போயின.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் விவசாயிகள் சென்று புகார் கொடுத்தால் 'உங்களுக்கு யார் மீது சந்தேகம் உள்ளது. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏதேனும் பிரச்னை உள்ளதா? மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் ஆடு காணாமல் போய்விட்டதா?' என்று போலீசார் கேள்வி கணைகளை தொடுக்கின்றார்களாம். ஆடு திருடு போகாமல் தடுக்க சிசிடிவி கேமரா வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை சொல்லி அனுப்பி வைத்து விடுவதாக சொல்லப்படுகிறது. 


நள்ளிரவில் ஆடுகளை திருடிச் செல்லும் கும்பல்


போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்காததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆடு திருடர்கள் கடந்த 15 நாட்களில் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் போளுரில் நடைபெற்ற சந்தையில் திருடு போன ஆடுகள் விற்பனைக்கு வந்திருக்கிறதா? என ஆடுகளை பறிகொடுத்த விவசாயிகள் சென்று பார்த்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வாலிபர்கள் சில பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டார்களாம். 


புகார் மீது சரிவர நடடிக்கை எடுக்காத போலீசார் மீது விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். 


Next Post Previous Post

No comments