திவ்யா கல்லூரி மாணவர்கள் 45 பேருக்கு டிவிஎஸ்-சில் வேலை

திவ்யா கல்லூரி மாணவர்கள் 45 பேருக்கு டிவிஎஸ்-சில் வேலை

திவ்யா கல்லூரி மாணவர்கள் 45 பேருக்கு டிவிஎஸ்-சில் வேலை

சேத்துப்பட்டு திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 45 மாணவர்கள் டிவிஎஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு பெற்றனர். 


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சென்னை டிவிஎஸ் பயிற்சி நிறுவனமும், திவ்யா கல்லூரியும் இணைந்து நடத்தியது. 


இந்த முகாமில் திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 3ம் ஆண்டு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் இஇஇ மாணவர்கள் கலந்து கொண்டனர். 


முகாமிற்கு திவ்யா கல்வி குழுமங்களின் தலைவர் பா.செல்வராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பொறியாளர் எஸ்.பிரவீன்குமார், செயலாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் கு.முருகன் அனைவரையும் வரவேற்றார். 


டிவிஎஸ் பயிற்சி நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அலுவலர் கணேஷ்குமார் கலந்து கொண்டு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தினார். முகாமில் கலந்து கொண்ட 54 பேரில் எழுத்துத் தேர்வில் 49பேர் தேர்வு பெற்றார்கள்.


திவ்யா கல்லூரி மாணவர்கள் 45 பேருக்கு டிவிஎஸ்-சில் வேலை


பின்னர் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு பெற்ற 45 பேருக்கு  வேலை வாய்ப்புக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜி.பி.வெங்கடேசன், எஸ்.கார்த்திகேயன், ஏ.அமுதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 


மாணவர்களுக்கு மருத்துவ முகாம் 


திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொம்மனந்தல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலகு இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்தியது. 


முகாமை கொம்மனந்தல் வட்டார மருத்துவ அதிகாரி பி.சீனுவாசன் துவக்கி வைத்தார். திவ்யா கல்வி குழுமங்களின் தலைவர் பா. செல்வராஜன் தலைமை தாங்கினார். 

மாணவர்களுக்கு மருத்துவ முகாம்


முகாமில் மாணவர்களுக்கு இலவசமாக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனைகள் செய்து தேவையான மாத்திரைகள் மற்றும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் எம்.அறிவரசு, யு.அருண்குமார், எல்.பாக்கியவதி ஆகியோர் செய்திருந்தனர். 


Next Post Previous Post

No comments