பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது
திருவண்ணாமலையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை சாரோன் கரையான்செட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(40), திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளர். ரியல் எஸ்டேட் மட்டுமன்றி பைனான்ஸ் தொழிலும் ஈடுபட்டு வந்தார்.
இவரது வீட்டில் மோட்டார் சைக்களில் வந்த சிலர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு செ=ன்று விட்டனர். இதில் சங்கருக்கு சொந்தமான கார் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். சங்கர் வீட்டில் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்தனர்.
பணம், கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்த ஸ்ரீபன்ராஜ் (29) என்பவர், சாரோனைச் சேர்ந்த எலக்ட்ரிஷியன் வேலை செய்யும் கணேசன் (22), மேஸ்திரி வேலை செய்யும் தேனிமலையை சேர்ந்த அரசு என்கிற பூவரசன் (22), எடப்பாளையத்தை சேர்ந்த வேன் டிரைவர் தமிழ்பிரபாகரன் (23) ஆகியோருடன் சேர்ந்து சங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
No comments