அம்பாளோடு இணைந்தார் அண்ணாமலையார்


நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்தபடியாக பெரிய விழாவாக திருவ10டல்¸ மறு உடல் உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. 

தை மாதம் இரண்டாம் நாளான நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு மாடவீதிகளில் மூன்று முறை வலம் வந்த அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மற்றும் பராசக்தி அம்மன் மாலை 7 மணிக்கு திருவுடல் வீதியில் கோசு கோட்டி  நடனம் ஆடியபடி ஊடல் கொண்டனர். 

அண்ணாமலையாரை மட்டும் வணங்கி வந்த பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளிக்க அண்ணாமலையார் சென்றதால் கோபம் கொண்ட உண்ணாமுலையம்மன் ஊடல் கொண்டு திருமஞ்சன கோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்றார். பின்னர் தன்னை வணங்கி வந்த பிருங்கி மகரிஷி அண்ணாமலையார் சென்று காட்சியளிக்க கிரிவலம் செல்ல இரவு தனது மகன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள குமரக் கோவிலுக்கு சென்று இரவு தங்கினார். 

அங்கு சாமிக்கு பச்சரிசி மாவு அபிஷேக் பொடி பால் தயிர் இளநீர்  கரும்புச்சாறு சந்தனம் விப10தி பஞ்சாமிர்தம் தேன் ப10க்கள் எலுமிச்சைச்சாறு  உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிவனடியார்கள் மெய்யுருகி சிவ பக்தி பாடலை பாடியபடி சாமி தரிசனம் செய்தனர்.



இதையடுத்து இன்று காலை அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. 

ஆண்டுக்கு இருமுறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்த மறுதினம் கிரிவலத்தில்  பெருமையை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் குடும்பத்துடன் கிரிவலம் வருவார். தை மாதம் மூன்றாம் நாள் பிருங்கி மகரிஷிக்கு வரம் அளிப்பதற்காக அண்ணாமலையார் மட்டும் தனியாக கிரிவலம் வந்து வரம் அளிப்பர்.

அதன்படி இன்று பிருங்கி மகரிஷிக்கு வரமளிக்க கிரிவலம் வந்த அண்ணாமலையாரை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கிரிவலப்பாதையில் பழனி ஆண்டவர் சன்னதியில் உள்ள பிருங்கி மகரிஷிக்கு வரமளித்து விட்டு 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று பிற்பகலில் சன்னதியில் மறு ஊடல் விழாவானது நடைபெறும். 

 


Next Post Previous Post

No comments