தி.மலை பஜாரில் ஆக்கிரமிப்பு-நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை


ஆக்கிரமிப்புகளை அகற்ற தண்டோரா போட்டு
நெடுஞ்சாலைதுறையினர் எச்சரிக்கை

திருவண்ணாமலையில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் கடைவீதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடிவருகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வடிகால்களை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி உத்தரவின்பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன்இ உதவி பொறியாளர் பூபாலன் மேற்பார்வையில் அதிகாரிகள் அடைப்பு ஏற்படும் கால்வாய்களை பார்வையிட்டு அவைகளை தூர்வாரி புதுப்பித்து கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

தற்போது திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள கடைவீதியில் பல கடைகளின் முன்பு இடத்தை ஆக்கிரமிப்புக்கு போர்டுகள் மற்றும் தகர சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால் வடிகால்களை தூர்வார முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திருவண்ணாமலை பெரிய தெரு மற்றும் அறிவொளி பூங்கா அருகில் செல்லும் சாலை உள்ளிட்ட இடங்களில் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்தனர். 

அப்போது நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பக்ககால்வாய் கட்டும் பணி நடைபெறவிருப்பதால் கடைகள் முன்இருக்கும் பொருட்கள் மற்றும் தகர சீட்டுகள் ஆகியவற்றை கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவை நெடுஞ்சாலை துறை மூலமாக எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தண்டோரா போட்டு அறிவிப்பு செய்தனர். 

நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் பச்சையப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Post Previous Post

No comments