திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா முன்னிட்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
உலக பிரசித்தி பெற்ற அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 29ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு கோயிலை பின்புறமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
தீபத் திருவிழா முடிந்து மூன்று நாட்களுக்கு நடைபெறக்கூடிய தெப்ப உற்சவம் ஆண்டாண்டுகளாக ஐயன் குளத்தில் நடைபெற்று வந்தது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வாண்டு தெப்ப உற்சவம் ஐயங்குளத்தில் நடைபெறாமல், கோயில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த இருந்த படி, தீபம் முடிந்த இரண்டாவது நாளான இன்று பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பராசக்தி அம்மன் பிரம்ம தீர்த்த குளத்தில் இருந்த தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்கு அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
பின்னர், பிரம்ம தீர்த்தக் குளத்தில் பராசக்தி அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் குறைந்தளவு பக்தர்கள் கலந்துகொண்டு தெப்பல் உற்சவத்தை கண்டு மகிழ்ந்தனர்..
No comments