போப் நிறுவனத்திற்கு சர்வதேச முதியோர் மையம் அங்கீகாரம்

pope

திருவண்ணாமலை தலாகுளத்தில் இயங்கி வரும் போப் தொண்டு நிறுவனம்  கடந்த 33 ஆண்டுகளாக கிராமப்புற நலிவுற்ற மக்களுக்கு பல்வேறு சேவைப்பணிகளையும்¸ 2002ம் ஆண்டு முதல் பெண் கல்விக்காக சிறப்பான சேவையையும் செய்து வருகிறது.  கடந்த 8 ஆண்டுகளாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தலித் இன முதியோர்களை பேணி காக்கும் வகையில் பலவித சேவைகளை செய்து வருகிறது. இதற்காக 760 தன்னார்வ தொண்டர்களை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி அளித்து கிராமங்களில் முதியோர்களுக்கு சேவை செய்ய ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. 

pope

இது மட்டுமன்றி மாதம் ஒருமுறை கிராமங்களிலிருந்து முதியோர்களை அழைத்து வந்து போப் தொண்டு நிறுவனத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச முதியோர் தினத்தையொட்டி போப் தொண்டு நிறுவனம் திருவண்ணாமலை பகுதி கிராமங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு பேரணி¸ கலைநிகழ்ச்சி¸ விளையாட்டு போட்டிகள்¸ மன அழுத்தத்தை போக்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள்¸ பல்வேறு பயிற்சிகள் ஆகியவை நடத்தி வருகிறது. 

போப் தொண்டு நிறுவன செயல்பாடுகளை பிரான்ஸ்சை தலைமையிடமாக கொண்டு கனடா¸ அமெரிக்கா¸ ஐரோப்பிய நாடுகளில் சேவை புரிந்து வரும் முதியோர்கள் உலக அமைப்பு ஆய்வு செய்தது. அப்போது முதியோர்கள் பராமரிப்பில் போப் தொண்டு நிறுவனம் அக்கறை காட்டி வருவதும்¸ அதனால் முதியோர்கள் மனநிம்மதியுடன் வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து சர்வதேச முதியோர்கள் பாதுகாப்பு அமைப்பு போப் நிறுவனத்தை அங்கீகரித்துள்ளது. 

pope

போப் நிறுவனத்திற்கு சர்வதேச முதியோர் மையம் அங்கீகாரம்திருவண்ணாமலை மண்ணில் இருந்து செயல்படும் நிறுவனத்திற்கு சர்வதேச அமைப்பு அங்கீகாரம் அளித்திருப்பது பெருமைக்குரிய  விஷயமாக கருதப்படுகிறது. இது குறித்து போப் தொண்டு நிறுவன இயக்குநர் வழக்கறிஞர் ஆர்.எல்.ரொசாரியோ கூறுகையில் மனமிருந்தால் சமூக பணியை சிறப்பாக ஆற்றிடலாம். ஆர்வமுள்ள சமூக சிந்னையாளர்கள்¸ பொது சேவர்கள்¸ கிராம புற வளர்ச்சியிலும்¸ சமூகப் பணிகளில் ஈடுபடுத்தி கொள்ள முன் வரவேண்டும். இதற்காக போப் நண்பர்கள் என்ற புது அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  விருப்பமுள்ளவர்கள் தங்களை இந்த அமைப்பில் இணைத்துக் கொண்டு சமூக பணியாற்றலாம் என்றார். 


Next Post Previous Post

No comments