ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
ஐகோர்ட் தீர்ப்பை நிறைவேற்ற கோரி தீர்மானம்
திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோவில் தெருவில் உள்ள லோட்டஸ் மகாலில் திருவண்ணாமலை ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவரும், ஆருத்திராப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவருமான ஆர்.ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஏ.ராஜன், மாநில பொருளாளர் வயலூர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கே.எம். பழனி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில தலைவர் எஸ்.எம்.முனியாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
14-வது நிதியை ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக பணியினை மேற்கொள்ளவும், அப்பணியினை ஒப்பந்தம் கோரி பணிகளை வழங்கவும் உயர்நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பினை பின்பற்ற வேண்டும். எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் பணிகளை தேர்வு செய்யும் போது பணி செய்யும் இடங்களை தலைவர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகே பணிகளை ஒதுக்க வேண்டும். எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் பணிகளை பொருத்த வரை தேர்வு செய்த பிறகு அதனை முழுமையாக தலைவர்களிடமே ஒப்படைத்து பணியினை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும் பொறுப்பை தலைவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
No comments